Paristamil Navigation Paristamil advert login

பெண்களாக பிறப்பது குற்றமா?

பெண்களாக பிறப்பது குற்றமா?

16 சித்திரை 2018 திங்கள் 17:32 | பார்வைகள் : 9014


பெண்களாக 

பிறந்ததை தவிர 
வேறு குற்றமேதும் 
புரிந்திருக்க வாய்ப்பில்லை
 
உங்கள் பார்வையில் 
எங்களுக்கு இரண்டு மார்பகங்களும் 
ஒரு யோனியும் மட்டும் தான் 
தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது
 
உணர்ச்சி வசப்பட்டு கூட 
உங்களால் எங்களையொரு 
குழந்தையாக பார்க்கமுடியாது 
போன பின் உங்களுக்கெள்ளாம் 
உணர்ச்சியென்று ஒன்று உள்ளதா
 
காமம் மட்டுமே கண்களுக்கு 
தெரிந்திருந்தால் உங்கள் 
தாய் கூட பிரசவ அறையில் 
பிறரால் கற்பழிக்கப்பட்டிருப்பாள்
 
உங்கள் ஆண்குறிகளின் 
வீரியம் தான் தவறு செய்ததாயிருந்தால் 
உங்கள் அக்காவும் தங்கையும் கூட 
பிறரால் கற்பழிக்கப்பட்டிருக்கலாம்
 
உங்கள் வயது தான் 
தவறு செய்ததாயிருந்தால் 
உங்கள் மனைவி கூட மற்றவர்களால் 
கற்பழிக்கப்பட வாய்ப்பிருக்கிறது
 
உலகிலுள்ள எல்லாப் பெண்களும் 
உங்களைப் போன்றவர்களால்
கற்பழிக்கப் பட்டுவிட்டால் 
ஆண்களென்ற நீங்களெல்லாம் 
வெறும் விலைமகன்களாகத் தான் 
வாழப்போகிறீர்களா
 
குட்-டச் பேட்- டச் பற்றி 
குழந்தைகளுக்கு சொல்லிக் 
கொடுப்பதை விட பெரியவர்களுக்கு
 சொல்லிக்கொடுங்கள் 
குழந்தைகள் குழந்தைகளாகவே
இருப்பார்களென்று
 
குற்றவாளிகளுக்கு தண்டனை யென்று 
சிறைவாழ்வு கொடுக்காமல் 
அரபு நாடுகளைப்போன்று 
ஆண்மையை துண்டித்து விடுங்கள் 
நரம்புகள் புடைத்தேனும் 
உயிர்பிரியும் வலி உணரப்பட வேண்டும்
 
மன்னிப்புகள் தொடருமாயின் 
எங்களைப்போன்ற ஹாஷினிகளும் 
சில நந்தினிகளும் பல நிர்பயாக்களும் 
முடிந்தவரை முஷ்கின் போன்றவர்களும் 
தொடரவே செய்வார்கள்
 
இதைவாசிக்கும் அண்ணணோ 
அக்காவோ அம்மாவோ அப்பாவோ 
தம்பியோ தங்கையோ யாராக இருந்தாலும் 
இவர்களை தண்டிக்கச்சொல்லுங்கள் 
மன்னித்து விடுவதென்பது 
எங்களை போன்றவர்கள் மற்றொரு முறை
 கற்பழிக்கப்படுவதற்கு சமமாகும்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்