Paristamil Navigation Paristamil advert login

உயிர் மேல் விருப்பமில்லை எனக்கு...!

உயிர் மேல் விருப்பமில்லை எனக்கு...!

26 மார்கழி 2017 செவ்வாய் 13:50 | பார்வைகள் : 12372


உயிர் மேல் விருப்பமில்லை எனக்கு...
உயிர் இல்லாவிட்டால் உன் உயிர்
எனைப் பிரிய வேண்டுமே
என்ற பயம் தான் எனக்கு.....
எனக்குள் துடிப்பது உன் உயிரல்லவா.....
 
கண்கள் வழியாய் இதயத்துள் நுழைந்தாய்....
காற்றாய் எந்தன் சுவாசத்தில் கலந்தாய்.....
காணாத பொழுதுகளில்
கண்களால் தேடவைத்தாய்.....
கண்ட பின்போ நாணத்தில்
கரைந்திடவா.... மறைந்திடவா.....
என தவிக்க வைத்தாய்....
 
கண்களால் களவாடிய கள்வனே...
என் இதயத்தை மட்டும்
இடமாறச் செய்தது ஏன்....
ஓயாமல் உன் நினைவில் துடிக்கிறது
எனக்குள் உன் இதயம்.....
மீண்டும் மீண்டும் நிறைகிறாய்...
காதலாய் என் நெஞ்சமெல்லாம்.....

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்