காற்றைத் தேடி...!
20 கார்த்திகை 2017 திங்கள் 12:44 | பார்வைகள் : 9902
காற்றின் நஞ்சை இழுத்து
திணறிற்று என் மூச்சுக் குழாய்
மேற்குக் கடலோரம் சென்றால்
கலப்படம் குறைந்த காற்று
கிடைக்கும் என்றார்கள்
மேலும் தொடர்ந்து சென்றால்
வெகு தொலைவில்
வேறு திசைகளில்
வெவ்வேறு வெளிகளில்
காற்றின் எச்சம்
காணக் கிடைக்கும்
என்றார்கள்
கடலில் நீச்சலடித்துச் சென்றால்
அடிவானம் தாண்டியதும்
காற்றுக் கிடைக்கலாம்
என்றார்கள்
பறக்கத் தெரிந்தால்
மேக மண்டலங்களைத் தாண்டி
காற்றை இழுக்கலாம்
என்றார்கள்
நான் ஆயத்தமானேன்
அப்போது எனக்கு
தாகம் எடுத்து
நா வரண்டு
தலையும் சுற்றிற்று
`குடிநீர் குடிநீர்' என்று
முனகத் தொடங்கினேன்
`காற்றிடம்தான் கேட்க வேண்டும்'
என்றார்கள்.