மலரின் காதல்..
24 தை 2013 வியாழன் 17:26 | பார்வைகள் : 15125
ஓ... நீதான் மலரோ
உனக்கேன் இத்தனை
கர்வம் மலர்ந்து நிமிர்ந்து
நிற்கிறாய்.
மலர்ந்த மருகனமே
மனம் வீசுகிறாய் எனக்குமட்டும்.
உன்னில் எனக்கு பிடித்தது
உன் கர்வம் ஏன் எனில்?
நான் உன்னில் பட்டதும்
கசங்காது கலங்காது
மலர்ந்து விடுகிறாய் பார்.
உன் புன்னை கண்டதும்
அந்த மதியே
விடிவதற்குள் ஓடிஒளிந்துகொள்கிறது.
உனை சீண்டும் வரை
நீ யார் யென்றும்
யாருக்கும் தெரியாது;
தீண்டியபின் அனைவரையும்
ஈர்கிறாய் உன்பக்கமாக.
நீயோ
என் வருகைக்காக காத்திருப்பாய்
நனோ...
உனை முழுமையாக
சூழ்ந்து கொள்வேன்
விடியும் வரை .
நமது காதலை சகிக்க முடியாத
சூரியன்
அவசரமாக உலகதிற்கு
சுற்றிப்பார்க்க வந்துவிடுகிறது
நானோ வெட்கப்பட்டு
ஒளிந்து விடுகிறேன்
உனை ப்ரிய மனமின்றி.
- காதல்கவி


























Bons Plans
Annuaire
Scan