என் கண்ணீரை ...!
3 புரட்டாசி 2012 திங்கள் 05:49 | பார்வைகள் : 15454
நீரோடா ஓடையிலே
நீ நடந்து போகையிலே
நானிருந்து ரசித்திருந்தேன்
மணிக்கணக்காய் உன் நடையை ..
மானோடும் காட்டினிலே
நீ நடந்து போகையிலே
உறைந்தவனாய் நானங்கு
பார்த்திருந்தேன் உன் நடையை ...
உன் மென்னடைப் பாதமடி
வலிக்காதிருக்க வென்று
நீ நடக்கும் இடமெல்லாம்- என்
பார்வைமலர் விரித்துவைத்தேன் ...
பூப்போன்ற உன் பாதம்
புண்பட்டுப் போகாமல்-என்
பார்வைச் செண்டனுப்பி
சொரிமலராய் விரித்து வைத்தேன் ...
காயாத உன் பாதம்
காயங்கள் ஆகாமல் -என்
கண்ணீரை கடவுளிடம்
காணிக்கை ஆக்குகின்றேன் ...


























Bons Plans
Annuaire
Scan