தோல்வி....
24 ஆடி 2012 செவ்வாய் 12:52 | பார்வைகள் : 10439
நீ
இலட்சிய பாதையில்
பயணிக்கும் போது
என்னை சந்திக்காமல்
செல்ல முடியாது.
நீ
ஒவ்வொரு முறையும்
விழும் போதெல்லாம்
நான் தான்
உன்னுடன் துணையிருந்தேன்.
நீ
சறுக்கும் ஒவ்வொரு
தருணத்திலும்
வெற்றி உனதாக்க
உன்னை தயார்
படுத்திக் கொண்டிருந்தேன்.
உன்
கழுத்தில்
வெற்றி மாலை
விழும் போது
நான் பிணவறையில் இருப்பேன்.
நான் தான் தோல்வி....
http://pirashathas.blogspot.com/