Paristamil Navigation Paristamil advert login

ஈழத்தின் சுவடுகள்

ஈழத்தின் சுவடுகள்

19 ஆடி 2012 வியாழன் 19:10 | பார்வைகள் : 13416


 

இனத்தின் அழிவுக்காய்
உங்கள் அனைத்து அர்ப்பணிப்பும்
அளப்பெரும் தியாகங்கள்
தலைவனின் அற நெறி விரும்பிகள்
மடிந்த மாவீரர்களின்
மனங்களில் உறவாடும் உறவுகள்
 
சிங்களவன் செல்வாக்கு கண்டு
உங்கள் சொல்வாக்கு
மாறாத மானத் தமிழர்கள்
உலகத் தமிழர்களின்
ஓங்கி ஒலிக்கின்ற
நாதாங்களும்
அவர்களின் தியாகங்களும்
உங்கள் விளங்கினை அறுத்தெரியவே !
ஈழத்தின் சுவடுகளே!
உங்கள் விடுதலை காண
பெரும் அவா எங்களுக்கு
 
சேனையை அணி வகுத்து
பகை வெல்ல செய்கை நெறி
கற்பித்த தளபதிகள் இன்று
சிங்கள சிப்பாயின் சப்பாத்துக்குள்
என் பாவமோ என் செய்வோம்
 
தர்மத்தை
காக்க விரைந்த வீரர்களே
எம்மை அதர்மம்
அடிபணிய வாய்த்த தென்று
கலங்காதீர்கள்
உங்களின் அர்ப்பணிப்புக்கள்
என்றும் எம் தாயகம் மறக்காது
எங்கள் மனமும் அதை ஒதுக்காது
 
உங்கள் தேகங்களில்
வீராத் தழும்புகள்
என்றும் மாறாதவைகள்
அது போல்
என்றும் எம் இலட்சியமும் மாறாது
இது எம் ஈழத்து
நாயகர்கள் மீது
உறுதி...

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்