Paristamil Navigation Paristamil advert login

ஆசை நாயகியே

ஆசை நாயகியே

25 ஆனி 2012 திங்கள் 18:10 | பார்வைகள் : 13376


 

அன்பு காட்ட யாருமில்லை
அநாதை நான் என்றதால்
அனைத்தையும் மறந்து
அன்பாய் நேசித்தேன் - எனை
அலைய விட்டு நீ போவதேனடி

அன்னை தந்தையில்லை
ஆண்டவன் குழந்தை நான் என்றதால்
அன்னை என நேசித்தேன் - எனை
அழவிட்டு நீ போவதேனடி

பரிதவிக்கிறேன் நான் என்றதால்
பாசமாய் நேசித்தேன் - எனை
பதற விட்டு நீ போவதேனடி

உறவு இல்லை என்று சொல்ல
உண்மையாய் நேசித்தேன்
உறவுகளின் நச்சரிப்பால் - எனை
உதாசீனம் செய்து விட்டு - நம்
உறவை மறந்து நீ போவதேனடி

கருணை காட்ட யாருமில்லை என்றதால்
கண்ணென நேசித்தேன் - எனை
கலங்க விட்டு
கலங்காமல் நீ போவதேனடி

கடைசிவரை நீயென்று
கலங்கியபடி சொல்ல
கவியென நேசித்தேன் - எனை
கதற விட்டு நீ போவதேனடி

தனிமையில் நான் இருந்து
தாகங்கள் துறந்து விட்டு
தவிக்கிறேன் என்று சொல்ல
தமிழும் சுவையும் போல் என நேசித்தேன் - எனை
தவிக்க விட்டு தவிக்காமல் நீ போவதேனடி

ஏதிலி நான் என்று சொல்ல
என்றும் நீயே என்று
எனை மறந்து நேசித்தேன் எனை
ஏதிலியாய் விட்டு நீ போவதேனடி

கேட்க நாதியில்லை என்று
கேட்கும் பொது எல்லாம் சொல்ல
கேள்விகளின்றி நேசித்தேன்
கெஞ்சி கேட்கிறார்கள் என்று
கேடுகேட்டவனும் கேவலமாக பேசி
கேலி செய்ய - எனை
கேள்விகளின்றி விட்டு விட்டு நீ போவதேனடி

இறக்கும்வரை நீ என்று
இன்பமாய் சொல்ல
இன்னல் மறந்து காதலித்தேன்
இகழ்வாக பேசி
இன்றியமையா துன்பத்தை
இறுதியாய் எனக்கு தந்து விட்டு
இன்பமாய் நீ போவதேனடி

மன்னவன் நீ என்றதால்
மனைவி என்று நேசித்த எனை
மனம் தளர்ந்து
மரண வார்த்தை தந்து விட்டு
மனம் நிறைந்த சந்தோசத்தில் நீ போவதேனடி

எனை வெறுப்பதாக சொல்லி
உனை நீயே ஏமாற்றி நகர்வாய் என்றால்
உனை பிரிந்து நன்றியுடன் நம்
காதலை சுமந்து நாளெல்லாம்
நான் வாழ்வேன் என் ஆசை நாயகியே,,,,!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்