Paristamil Navigation Paristamil advert login

என்னோடும் எப்போதும்......

என்னோடும் எப்போதும்......

2 ஆனி 2012 சனி 17:23 | பார்வைகள் : 13331


 

சிந்தைக்குள் நின்று 
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம்
என் வலியின் பிரசவிப்பாய்....


சில்லென்ற ஒரு காதலென 
சிந்தை மயங்கி நின்ற வேளை
சிதறுப்பட்ட நம்மினம் போலவே
சீரழிந்து போனதாய் என் காதல்...


இடமாற்றம் இடறிய போது
இல்லாமல் போன காதலால்
இதயம் ஓய்ந்ததே....
இன்றும் நீ காணாமல்
இதயம் பெரும் தடுமாற்றத்தில்......


பார்வையின் ஜீவிதத்தில்
பயணித்த நேசம்
பாதை மாறிப் போன போனதாய்.....
ஆனாலும்.....
பிரிந்து போனாய் நீ
நின் நினைவு மட்டும்  பிரியாமல்
என்னோடும் எப்போதும்.......

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்