எனை நீ பிரிந்த நாள்
19 சித்திரை 2012 வியாழன் 13:07 | பார்வைகள் : 9997
ஓ....அன்று
அந்த நினைவுகள்தான்
எத்தனை கொடியவை ?
என் மனதைக் கேட்கிறேன் - அது
அழுது துடிக்கிறது
ஐம்புலன்களே நீங்கள்
உறங்கிப் போய்விடுங்கள் என்றேன்
மரண தேவதையே - என்னை
வசூலித்துக்கொள் என்றேன்
இதயச் சுவர்களுக்கு எத்தனை வலிமை
இன்னும் வெடிக்காமல் துடிக்கிறது
துன்பங்களை கைது செய்ய நினைத்து
பின் சிரிக்கிறேன்
என்னால் கத்தரிக்கவும் முடியவில்லை
சித்தரிக்கவும் முடியவில்லை
என் பிறந்த நாளை விட - நீ
எனை பிரிந்த நாள் தான்
ஆழமாக என்னுள்ளே
வலிப்பதை நீ அறிவாயா????
- சுரேஜினி பாலகுமாரன்