தர்மயுத்தம்..
29 பங்குனி 2012 வியாழன் 13:12 | பார்வைகள் : 11455
நிலவோடு,
மெளனத்தால் உறவமைத்து
கதை பல பேசி
கரைந்து போகிறது நாழிகை.
நிஐம் என நினைத்து,
நிழலோடும் வாழ்ந்தும்
கனத்து போகிறது இதயம்.
நிறுத்தாமல் ஓடும்
கடிகார முள்ளுக்கும்
எல்லையுண்டு - ஆனால்
நான் நான் போக
திசைகள் இல்லை.
இருட்டில் இருந்து
வெளிச்சத்தை தேடும்
அவலம் இன்று.
ஏன் என்னும் கேள்விக்கு
விடையில்லா தொடர்கதை.
தேடும் இடமெங்கும்
வழிந்து கிடக்கிறது முகங்கள்
ஆனால்,
நான் தேடும் விழிகள்
இல்லை அங்கு.
தேன்கூடாய் இருந்து வாழ்வில்
கல்லெறி பட்டதாய் வலிகள்
உதயத்தை தொலைத்து
இதயத்தை கிழித்து விட்டேன்
துண்டிலில் பட்ட மீனாய்
பொறிக்குள் சிக்கி விட்டேன்.
நாலுபக்கமும் தாக்குதல் நடத்த
ஒவ்வொன்றையாய்
என்னை விட்டு போக
எனக்காக யார் இருப்பார் எனி?
வெறுக்கும் உள்ளங்களுக்குள்ளும்
ஜெயிக்க துடிக்கும் மனசு,
பரிகாசம் செய்பவர்களுக்கு
வாழ்க்கையை புரிய வைக்க
போராட தயாராகும் எண்ணம்,
நினைத்ததை முடிக்க
தொடங்கிற்று தர்மயுத்தம்
வெற்றிகள் எனதாகலாம்
வாழ்வும் வெளிச்சமாகலாம்.
இல்லையேல்,
நாளை நானும் ஞானி ஆகலாம்....