Paristamil Navigation Paristamil advert login

"சாதி கேட்டதுண்டா...............?"

25 மாசி 2012 சனி 14:43 | பார்வைகள் : 10195


 

எங்கும் சாதி எதிலும் சாதி;
சாதியென்றசகதியில் குளித்து
சாதியை அடையாளமிட்டு
சமுகத்தை சூனியமாக்கும்
சூழ்ச்சிகாரர்களே...?
இவர்களிடமும் கேளுங்களேன்
சாதியை....!?

படுக்கை விரித்து படுத்து
காம இச்சையை காசாக்கி
எச்சிலால் எல்லாடத்தையும்
நனைத்து எழும் விலைமகளிடம்
நீகேட்டதுண்டா.........?

இரு பால்கலப்பால்
எப்பால் என புரியாமல்
முகவரி தொலைத்த
உறவுகளிடம் கேள்;
"குறிப்பிட்ட சாதியிலிருந்து
மட்டும்தான்
வந்தீர்களா.............?"

அறுவை சிகிச்சையில்
செலுத்தப்பட்ட ரத்ததிற்கு
நீ கேட்டதுண்டா..?
எந்த சாதி ரத்தமென‌
அந்த மருத்துவனிடமாவது கேட்டதுண்டா..?
எந்த சாதிகாரனென்று..?

உணவிட்டு உயிர்காத்து
உடல் வளர; உழைத்து காத்த
உழவனிடம் கேட்டதுண்டா சாதியை...?
வேறு சாதிக்காரன் வியர்வை
விழுந்த சேற்றில்
விளைந்த சோற்றை
உண்டதில்லையா நீ ஒரு போதும்....?

கேவலம்....
வெள்ளை சுருட்டின் வெந்த உடம்பின்
கடசி நெருப்பை கடனாகதந்து
உன் சுருட்டை உயிர்ப்பித்தவனிடமாவது
கேட்டதுண்டா... சாதியை....?

வயிற்று பசிக்கு சோறு போட்டவன்
வட்டிக்கு பணம் கொடுத்தவன்
பேருந்து நெரிசலில்
உட்கார இடம் கொடுத்தவன்
இவன்களில் எவனிடமாவது
என்றாவது கேட்டதுண்டா...?
சாதியை....?

வேசியுடன் படுக்க சாதி தேவையில்லை;
வேலைக்கு வேண்டும் சாதியிங்கே...
கடன்வாங்க சாதி கேட்க மாட்டான்
கல்வி பணிக்கு சாதி கேட்பான்;
சாதி என்பது தவறுயென‌
தெரிந்தாலும்.........

பின் ஏனடா.......
சாதி சகதியை...
பூசிக்கொண்டு பூரிப்படைகிறாய்.?
சாதியோடு இங்கு வாழமுடியது
சாதி ஓடும் வரை வாழ்வு புரியாது.
இனிமேலும் சாதிபார்ப்பவன்
நரம் தின்னும் நாயின்
மலம் தின்னும்
ஈனனே........??!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்