Paristamil Navigation Paristamil advert login

கூண்டு கிளி

கூண்டு கிளி

19 மாசி 2012 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 11681



கூண்டு கிளியாய் - நீ
சிறை இருப்பதால்
காற்றும் குளிர்ச்சியற்று
அனலைய் கொதிக்கிறது.
உன் தரிசனம் இன்றி
தனிமையில் தவிக்கிறது - இப்
பேதையின் மனசு.

சூரிய உதயமின்றி
தாமரைக்கு ஏது பிறப்பு?
உன் அன்பு இன்றி
இந்த ஏழைக்கு ஏது வாழ்வு?

பிறவிகள் பல தோன்றிடினும்
உன்னுடன் கொண்ட
உறவு மாறிடாது
தடைகள் பல
வந்திடும் போதிலும்
உண்மை பாசம்
என்றும் தோற்பதில்லை.

நீயே!
நினைவானதால் இன்று
உலைக்களமாக உள்ளம்,
பனிக்கட்டியாக விழிகள்
மரித்தும் உயிர் வாழும்
அற்புதம் என்னில்.....

என்னை மறந்து
உன்னை மட்டும்
நினைத்திருந்தேன்
இன்று குரல் கேட்டதினால்
மீண்டும் உயிர் பெற்றேன்!

ஏக்கங்களுக்கு விடை கொடுக்க
வரமாய் வருவாய்
என்ற நம்பிக்கையுடன்
இயல்பு வாழ்க்கையில்....

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்