சிதையும் தமிழ் கலாசாரம்
8 தை 2012 ஞாயிறு 17:27 | பார்வைகள் : 10458
சீர்மிகு தமிழினம் இன்று
சிதைந்ததை எண்ணித் துடிக்கையில்
விளைந்த தமிழ் மானமது
வீழ்ந்ததடா சாக்கடையிலே
மானத்திற்காய் உயிர்தந்த எம்
மாந்தையரோ மதிகெட்டு இன்று
மயங்கி வீழ்ந்தனரே
மேற்கத்திய நாகரிகத்தினிலே
கட்டிக்காத்த கலாசார நிலவதுவோ
கருமுகிலில் புகுந்து மறைகிறதே
சுதந்திரமாய் சுத்திவந்த தென்றலோ
சுத்தம் கழைந்து செல்கிறதே
பாவப்பட்ட மண்ணினிலே
பாவச்செயல்கள் எத்தனையோ
கருவைச் சுமந்த கன்னியரின்
கருகளைவுகள் எத்தனையோ
தொட்டிலிலே தூங்க வேண்டிய திசுகளோ
தொட்டியிலே குப்பைத் தொட்டியிலே
தலை குனிந்து சென்ற பெண்களோ
தரம் கேட்டு சந்தையிலே மந்தைகளாய்
மதுவினிலே மயகியதால்
மானம்தனை மறந்துவிட்டான்
வீரத் தமிழ்மகனோ
வீதியிலே சுருண்டு வீழ்ந்துவிட்டான்
சீர்மிகு யாழ்குடா மண்ணதுவோ
சிங்கப்பூராய் மாறியதாம்
செல்வச் செழிப்பினிலே அல்ல
சீர்கெட்ட செயலினிலே ......
என் இளைய தலைமுறையே
எழுந்திடுவீர் விழித்து எழுந்திடுவிர்
தமிழ் இனம் காத்த பாரம்பரியத்தை
தலை நிமிர்ந்து காத்திடுவீர் காத்திடுவீர் .....
- வேலணையூர் சசிவா