Paristamil Navigation Paristamil advert login

மாவீரரே வழி சொல்லுங்கள் வலியால் தமிழ் இனம் துடிக்கின்றது!

மாவீரரே வழி சொல்லுங்கள் வலியால் தமிழ் இனம் துடிக்கின்றது!

27 கார்த்திகை 2011 ஞாயிறு 18:43 | பார்வைகள் : 10296


வலிக்காமல் வாழ்க்கையில்லை -ஆனால் வலியால் தினமும் துடிக்கிறது எமது இனம்
வழி தோறும் வருத்தத்தை குணமாக்க என்று - பிச்சை எடுக்கிறார்கள் சிறுமிகள்
வழிந்தோடும் கண்ணீருடன் அவர்கள் கழுத்தில் தொங்குகிறது நோயின் சான்றிதழ்
வழிதொரு பிச்சைக்கார இனமாக தமிழ் இனம் ஈழத்தில் அலைகிறது
அரசாங்க ஆஸ்பத்திரியாம் ஆமி காவல் நிலையமாகிறது
இலவச மருத்துவமனை - இன்னல் தரும் துன்பமனையாகிறது
மருத்துவர் வருத்தத்தை தருகிறார்கள்  வருத்தத்தின் விபரமறியாது - மொழி புரியாது மருத்துவம் நடக்கிறது
நோய் குணமாக்கும் மனை அல்ல - நோய்பெருக்கும்  ஈய்வு கூடமாக மாறுகிறது!

மாவீரரே வழி சொல்லுங்கள்  வலியால் தமிழ் இனம் துடிக்கின்றது!

சொந்தகாணியில் தன்வீட்டில் வாழமுடியாது - எதிரில் கொட்டிலில் வாழ்கின்றோம்
சோதனை பாதுகாப்பு என்று சொல்லாமலே வீட்டில் பூந்து - கொள்ளைகள் கற்பழிப்புகள் சுமையோடு வாழ்கின்றோம்
சொற்பகாலம் தான் வாழ்வோம் - படும்வேதனையே  மலைபோல் இருக்கிறது
சொல்ல வார்த்தையில்லை நம்பி பேசமுடியவில்லை - இருள் சூழ்ந்து இருக்கின்றோம்
சொல்லி அழ முடியவில்லை நின்மதியாக சாக கூட முடியவில்லை – பசி நோய் பயித்தியம் வெறியாக இருக்கின்றோம்
விடுதலைக்காய் நீங்கள் எரிந்தீர்கள் - விடியலுக்காய் நீங்கள்  உங்களை அழித்தீர்கள்
பணத்துக்காய் பதவிக்காய் தன் இனத்தையே அழிக்கிறார்கள் - சில தமிழர்கள்
தன் வாழ்வுக்காய் தன் இன்பத்திற்காய் அயலவனைக் காட்டி கொடுக்கிறார்கள் - சில சுயநலத் தமிழர்கள்
ஒற்றுமையைக் குலைக்க  எமது விடுதலையை அழிக்க எம் இனத்தை இரண்டாக்குகிறார்கள் - சில தமிழர்கள்
இவர்களை இனம் காண இரண்டர்களை ஒழித்துவிட

மாவீரரே வழி சொல்லுங்கள்  வலியால் தமிழ் இனம் துடிக்கின்றது!   

பல தமிழ் அமைப்புகள் புலம் பெயர் நாட்டில் - பாராட்ட வேண்டும் அவர்கள் உணர்வை
பல அமைப்பின் உணர்வுகளும் தமிழ் உணர்வொடு இருக்கும் போது
பலம் பொருந்த ஏன் நீங்கள் இணைவை காட்ட கூடாது
பாவமானவர்கள் தமிழர்கள் பாவிகள் தமிழர் என கேட்பதிலும்
பலமுடையவர்கள் தமிழர் பண்புடையவர்கள் தமிழர் என காட்ட  - ஏன் நாம் ஓன்று பட முடியாது
பல கட்சிகளாக இருங்கள் ஆனால் பலமுள்ளவர்களாக - ஒன்றாக நில்லுங்கள்
ஜந்தாம் வகுப்பு பாடம் உங்களுக்கு புரியவில்லை ஆட்சியாளருக்கு அது புரிகிறதே
அது தான் தமிழன் முழு முட்டாளாக நிற்பதற்கு காரணம் - உணர்வோடு ஒன்றாகுங்கள்

மாவீரரே வழி சொல்லுங்கள்  வலியால் தமிழ் இனம் துடிக்கின்றது!

உன்னைப்போல் பிறரை நேசி- நீ கடவுளை நேசிக்கவேண்டாம் - அவர் கட்டளைகளை நேசி
வெள்ளைக்காரரை நேசிக்கவேண்டாம்   உன் துன்பப்படும் இனத்தை நேசி
உன் வாழ்வை நேசிக்க வேண்டாம் உன் நாட்டை நேசி
உன் உயிரைப்போல்-சிறையில் வாடும் பசியில் வாடும்நோயில் வாடும் என் மக்களை நேசி
எமது விடிவு எம்கையில் தான் எமக்கு தீர்வு எம் முடிவில்தான்
முடியும் விடியும் தோல்வி நாளை வெற்றியாக மாறும்
விளையாட்டில் இலண்டன் வெல்கிறது இந்தியா தோற்கிறது
தோற்பவை மீண்டும் வெல்வதை நாம் பார்க்கவில்லையா?
மாறும் காலம் மாறும் - முதலில் நீ மாறப்பார்  வழிகள் உண்டு. 
நம்மை நாம் நம்பவேண்டும்- நாம் ஒன்று சேரவேண்டும்

மாவீரரே வழி சொல்லுங்கள்  வலியால் தமிழ் இனம் துடிக்கின்றது!

ஊர்வலம் முக்கியமல்ல - உன் ஒற்றுமையே முக்கியம்
போராட்டம் என சேர்வது முக்கியமல்ல - சாதிப்பதற்கு புதிய சிந்தனைகள் முக்கியம்
ஓருவர் சொல்வதை  நாம் கேட்கவேண்டும்  - ஒவ்வொருவரையும் நாம் மதிக்கவேண்டும்
குற்றம் குறை என கையை காட்டதே - உன் இனத்தையே நீயே காட்டிக் கொடுக்காதே
இனியாவது எமது இனம் வாழ - மண் விளைய- கலாச்சாரம் வளர -தமிழ் ஆள 2012ல் நீ மாறிவிடு
அதுவரை நீ மழையில் குளிரில் நனைந்து -ஊரில் எமது இனம் படும் பசி துன்பம் உணர்ந்து
நாம் இந்த நாட்டைவிட்டு எமது நாட்டில் போய் வாழ – நண்பா, சகோதரா  மாறிவிடு, வழிவிடு.

கவிஞர் அருள் தெய்வேந்திரன் லுகானோ – சுவிஸ்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்