இலட்ச்சிய வேங்கைகளே
15 மார்கழி 2011 வியாழன் 14:31 | பார்வைகள் : 11170
தமிழீழ வானத்தில் ஒளிவிட்ட
மாவீர வேங்கைகளே...
வீரம் விளைவித்த விளை நிலமதில்
விடுதலை வேள்வியில் விறகானீரே
எம் மண்ணிற்க்கு உயிர்தந்து
உம் உயிரை மண்ணிற்க்கு வித்திட்ட
மாவீரத் தெய்வங்களே
உமை வணங்குகின்றோம்
கார்த்திகை மலர் கொண்டு
தேசத்தின் விடுதலையை
உயிர் மூச்சாய் கலந்து
செந்தனல் தெறிக்க எதிரியை
அழித்து ஆகுதியானவரே
யாகத்தீயிட்ட ஓமப் பொருளாக
நீங்கள் ஓமப் புகை முட்டி கொட்டும்
வானமாக எம் விழிகள் ஆனாலும்
உம் தடம் தொடர்ந்து எம் தடங்கள்
உம் நினைவுகள் காவிய எம் உடல்கள்
மண்ணினை மீட்ப்பதற்க்காய்
மரணத்தை ஏற்ற மாவீர வேங்கைகளே
கண்ணுக்குள் தமிழீழ கனவை
நித்தம் நித்தம் சுமந்து
மண்ணினை மீட்டிட
மண்ணிற்க்குள் மடிந்து உரமாகி
எம் நெஞ்சுக்குள் வாழும்
கல்லறைத் தெய்வங்களே
நீங்கள் சென்ற காலடித் தடம் தேடி
எம் விழிகள் பார்க்கின்றதே
உங்கள் தியாகம் தனை நினைத்திடும் போது
கண்ணில் கண்ணீர் கசிகின்றதே
உங்கள் இலட்ச்சியதை நாங்கள் சுமப்போம்
ஈழத்தின் விடியலுக்காய்
ஒன்றாய் சேர்ந்திடுவோம்.