ஸ்ரீநகரின் துலிப் பூந்தோட்டம் உலக சாதனை புத்தகத்தில்
22 ஆவணி 2023 செவ்வாய் 13:10 | பார்வைகள் : 5432
புகழ்பெற்ற இந்திரா காந்தி நினைவு துலிப் பூந்தோட்டம் உலக சாதனை புத்தகத்தில் (லண்டன்) சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜபர்வான் மலைத்தொடரின் அழகிய அடிவாரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இந்த பூந்தோட்டத்தின் நிலையை ஆசியாவின் மிகப்பெரிய துலிப் பூக்களின் புகலிடமாக அங்கீகரிக்கிறது.
1.5 மில்லியன் துலிப் பூக்களில் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ள 68 தனித்துவமான துலிப் வகைகளின் வியக்கத்தக்க தொகுப்பைக் காட்டுகிறது.
இப்பகுதியின் இயற்கை அழகு மற்றும் துலிப் தோட்டத்தின் மகத்துவம் மீண்டும் ஒருமுறை கவனத்தை ஈர்த்துள்ளது.
துலிப் பூந்தோட்டத்தில் நடைபெற்ற விழாவில், மலர் வளர்ப்பு, தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் ஆணையக செயலாளர் ஷேக் ஃபயாஸ் அகமது, ஜனாதிபதியிடம் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.
மேலும் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் (லண்டன்) தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் சுக்லா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.