Paristamil Navigation Paristamil advert login

விலகிப்போனாலும் விடாது காதல்

விலகிப்போனாலும் விடாது காதல்

24 மாசி 2015 செவ்வாய் 19:59 | பார்வைகள் : 13858


பகுத்தறிவின் எச்சத்தில்
பாசம் கண்ணீராகப் பீரிடும்போது
சில உணர்வுகள்
ஏங்கிக் கரையும்
பேர் வலியாய்
நெஞ்சுக்குள்
அம்மாவின் ஆசை
அலைபோல் அடித்துத்
திரும்பியது.

முதல் முதல்
அவள் முலையை
சூப்பியபோது
என் தலை தடவி என்ன
நினைத்திருப்பாள்

நான் முனகிக்கொண்டே
அவள் இரங்கும் பாலை
வாயால் ஒழுகவிட
துடைத்துவிட்டு
என்ன செய்திருப்பாள்

எது சரி
எது பிழை என்று தெரியாமலே
அவள் மடியில்
நான் கழித்த நரலைத்
துடைக்க
கூச்சத்தில் நான்
காட்டிய முரசைப்பாத்து
என் மணியில்
முத்தம் தந்தபோது
நான்
மூச்சுவிடாமல் சிரிக்க
அதை ரசித்து
அவள் அடைந்த இன்பமென்ன

அப்பாவரும்போது மட்டும்
என்னை
உங்கள்
பிள்ளை சிரிக்கிறான்
பாருங்கள் என்று
உள்ளன்போடு உறவைப்
பகிர்ந்தாளித்த பாசம் என்ன

இது என்னகொடை

இரவுக்கும் பகலுக்கும்
இடையில்
ஏதோ ஒரு இயக்கம்
ஆதாயம் இல்லாமல்
ஆயுலுக்கும் வந்தபோதும்
அவள் மடியின்
சூட்டு சுகம் மட்டும்
உயிர் மூச்சின்
உற்காற்றாய்
கரைகிறதே
காலமெனும் துரத்தின் கண்ணீராய்.

 

ப.பார்தீ

வர்த்தக‌ விளம்பரங்கள்