காணத்துடிக்கும் கன்னி
30 கார்த்திகை 2014 ஞாயிறு 11:45 | பார்வைகள் : 10302
காணாத கன்னி நீயே
கண்பார்க்க துடிப்பவளே
குரலோசை என் செவியேற
உன்னைப் பார்க்க
விழி வலி தந்து துடிக்குதடி
கவிதையை கனவில் கட்டி
காணமல் போகுதே
உன் முகவரி!
கண்ணாடி வளையலோசை
முன்னாடி சத்தம் வர
பின்னாடி உருகுதே நினைவுகள்
எப்படிநீயிருப்பாய்
கற்பனையில் காணுகின்றேன்
காதில் வைத்த தொலை பேசி
உன் இனிமைக்காக காற்று வீசும்
காதல் கதைபேசுகிறேன்
கண்காணாத கண்ணியோடு
கவியாக உன்னை
கவி எட்டில் எழுதி வைத்தேன்...
உன் திரு முகம் காணத்துடிக்கும்
என் விழிரெண்டும்
உன் குரலோசை கேட்கிறது
செவிரெண்டும்
உன் சிறு தகவலுக்கும்
சிறு அழைப்புக்கும்
காத்திருக்கும் அலைபேசி
நண்பனாகினேன்
நற் பண்பு சொன்னாய்
நாயகன் என்றால்
நயவன்சகனென்று
திட்டுவாயா?
நாயகி என்று உரிமையோடு
கட்டி அணைக்க
நினைப்பாயா..