Paristamil Navigation Paristamil advert login

பெண்ணின் காதல் வலி

பெண்ணின் காதல் வலி

6 கார்த்திகை 2014 வியாழன் 08:30 | பார்வைகள் : 14194


அமைதியான எனக்குள்
உன்னைக் பார்த்ததும் 
எனதுள்ளம் பரபரப்பதை பார்த்து
உன்மேல் உள்ள பிரியத்தை
என் தோழியும் புரிந்து கொண்டாள்
 
யாருக்காகவும் காத்திராத கால்கள்
உன்னைக் காணவே காத்திருப்பதில்
சுகமொன்று கண்டேன்
 
உன்மேல் நான் கொண்ட காதலால்
ஏக்கம் கொண்ட மனதினையும்
தூக்கமில்லா பொழுதுகளையும்
என்னால் தொலைக்க முடியவில்லை
 
உன்னைக் காணத் துடித்து
தவித்து நிற்கும் பொழுதெல்லாம்
எனக்குள் தோன்றும்
காரணம் இல்லாத சிரிப்பினையும்
உளறலான பேச்சினையும்
எனக்குள் ஏற்படும் 
தவிப்பின் துடிப்பைப்பையும் பார்த்து
என் தோழி 
ஏளனமாகச் சிரிக்கிறாள்
 
நான் உனக்காகாக காத்திருக்கும் 
ஒவ்வொரு நிமிடத் துளிகளும்
உன் மௌனம் எனக்கான சம்மதமா?
மறந்துவிடு என்று மட்டும் சொல்லிவிடாதே
உன்னை மறந்து வாழும் தைரியம்
எனக்குள் இல்லை
 
உன் நிழல் கூட
எனக்குள் வாழ்வதை உணர்ந்து கொள்
ஏன் என் கனவுகள் கூட 
உனக்கானதே என்பதையும் புரிந்துகொள் 
உனக்குள் இன்னும் 
ஏன் இந்த மௌனப் போராட்டம்
 
என் உயிர் மூச்சும்
உன் பெயரைத் தானே சுவாசிக்கிறது
என் உயிர் மூச்சே நீ தான் என்று
என் நினைவலைகளின்
நிதர்சனத்தில் நிரம்பி நிற்கின்ற
என் அன்றாட நிஐ வாழ்கைக்குள்
என் உயிரின் அழகாய்
தெரிபவன் நீ தானேடா
கூறடா
இன்னும் உனக்குள் ஏன் இந்த
மௌனப் போராட்டம்...!
 
விக்கி நவரட்ணம்

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்