தீபாவளி
22 ஐப்பசி 2014 புதன் 11:14 | பார்வைகள் : 10317
ரூபத்தில் வழியாய்
தீபத்தில் ஒளியாய்
காலத்தில் சிறையாய்
ஒளியில்லா வாழ்வில் தீபாவளி
முள்வேலியில் நின்று தனக்கும்
சரவெடி கொளுத்தி சுட வேண்டும்
நண்பர்களோடு சேர்ந்து திரிய வேண்டும்
கைகோர்த்து சுற்றி விளையாட வேண்டும்
சரவெடியினை நண்பர்களின்
காலில் எறிந்து விளையாட வேண்டுமே
ஆசை கொண்ட மனம் துடித்து
முள் வேலியில் நின்று ஏங்கும் மனம்
சிறு சரவெடி சத்தம் கேட்டால்
இராணுவத்தின் மிரட்டல் வெடி
இல்லையேல் சாவு வெடி
இதையெல்லாம் சொல்ல முடியவில்லை
தீபவாளியில் கிடா வெட்டி
கடாவில் சமைத்து உண்ணும் ஓர் காலம்
இன்று...!
தீபாவளியில் வீட்டிற்கு வீடு அமைதி
ஏன்...?
பயம் சரவெடி சத்தத்திற்கு
காலம் தான் தீபாவளியில்
வந்து கொண்டே இருக்கு
தமிழனுக்கு தீபாவளியேது மானிடா..?
சுதந்திரமில்லா தீபாவளி
நாம் கொண்டாடுகின்றோம்.....!.
சுதந்திரம் இல்லா தீபாவளியில்
தாயகத்தில் அவர்கள்
இங்கு ஆடம்பரமாய் தீபாவளி
ஏன்
பணமும் சுதந்திரமும் ஆனால்
முள்வேலியில் இருக்கும் எம் உறவுகள்
சுதந்திரம் இல்லா தீபாவளி
சந்தோசம் இல்லா தீபாவளி
சரவெடியில்லா தீபாவளி
இதுதான் தீபாவளிய உலகமே
தமிழினம் அழியவில்லை
தலை நிமிர்ந்து தீபாவளி கொண்டாடும்