இணையத்தில் இணையும் இதயங்கள்
29 சித்திரை 2014 செவ்வாய் 13:05 | பார்வைகள் : 10202
விடையோடு விளையாடி
வினாத் தேடும் உலகினிலே
இணைய இடையோடு
இழையோடும் இளசுகள் நாம்...
பேஸ் புக்கின் முகத்தினையூம்
பேயறைந்து போய் பார்க்கையிலே
லைக்குகளும் கொமன்ட்ஸ்களும்
லைபோடு கலந்துவிடும்
கூகிளின் இதயத்தினுள்
கூவூகின்ற தேடல்களில்
ஆடுகின்ற மயில்களாய்
ஆர்ப்பரிக்கும் நண்பர்கள் நாம்...
வட்ஸ்அப்பில் வழுக்கி விழுந்து
வட்டங்களாய் முடிவுமின்றி
சட்டங்கள் பல வந்தும்
சதுரங்களாய் வாழ்கின்றோம்.
வைபரின் மூளையிலே
வைப்பிலிட்ட நம் பெயரை
நானிலமும் நிலைத்துவிட
நாளாந்தம் நனைகின்றௌம்.
ஸ்கைப்பின் முத்தத்திலே
ஸ்பரிசங்கள் மறந்துவிட்டு
புஷ்பங்களை தூவி விட
புதுமையைத் தேடுகிறௌம்.
யாஹூவின் அணைப்பினிலே
யாருடனும் சேராமல்
பாரினையூம் மறந்தவண்ணம்
பாசம்தனைச் சுவைக்கின்றோம்.
நிம்புஸின் நினைப்பினிலே
நித்தமும் நித்திரையில் தாமதமாய்
சித்தமது சின்னதாய் சிதறிவிட
சிறுவனாய் மாறுகின்றோம்
ப்ரிங்கோடு பிணைந்துவிட்டு
ப்ரியமாய் பேசிவிட
காத்திருக்கும் மனைவிக்கும்
காதலும் கரைந்தோடும்...
கவிஞர்: கல்முனையான்