வலிகள் தந்தவன்....

17 பங்குனி 2014 திங்கள் 17:01 | பார்வைகள் : 13007
வலிகள் தந்தவன்
அமைதியாய் வாழ்கின்றான்
மனதைக் கொடுத்தவள்
மரணத்தை நாடுகின்றாள்
காற்றினில் வந்தவன்
கண்ணாம் பூச்சி
ஆடுகின்றான்
பாட்டினில் கடிதம் அனுப்பி
வைத்தியம் செய்கிறான்
பாவம் பேதை என பொய்யாய்ப்
புகழ் பாடுகின்றான்
மறந்தது அவனுக்கு
உண்மையின் நியதி
கற்றிடுவான் நாளை
பெண் அவள் கொடுக்கும்
விலை அறிந்து......