Paristamil Navigation Paristamil advert login

என் தேடலின் சுகமே...!

என் தேடலின் சுகமே...!

14 மாசி 2014 வெள்ளி 13:08 | பார்வைகள் : 14321


என் தேடலின் சுகம்
நீயென்று கண்டேன்...!

கலங்கரை விளக்கமாய்
என் வாழ்வினில் வந்தாய்...!

கலங்கிடும் வேளையில்
உன் கரங்களால் என்னை
அணைத்துக்கொள்கிறாய்...!

என் வாழ்வில் வழிகாட்டியாய்
என்னுடன் பயணிக்கிறாய்...!

தீமை என்னை அணுகவிடாமல்
கேடயமாய் காத்து நிற்கிறாய்...!

என் நெஞ்சத்தில் ஒளி வெள்ளமாய்
காட்சி அளிக்கிறாய்...!

தொலைதூரத்தில் இருந்தாலும்
உன் அன்பினால் என் இதயத்தில்
அருகிலிருக்கிறாய்...!

என் செயல்களில் எல்லாம்
என்னுடனே செயல்படுகிறாய்...!

வேறென்ன வேண்டுமெனக்கு
இவ்வுலகில் உன்னைப்போல்
உறவொன்று வருமோ...!

- டீபா

வர்த்தக‌ விளம்பரங்கள்