உன் நினைவில்....!
31 ஐப்பசி 2013 வியாழன் 18:01 | பார்வைகள் : 14404
நினைவுகள் ஆயிரம் அதில்
நிம்மதி உன் நிழல்
மடியினில் சாயும்
பொழுதினில் கூட
மலர்ந்திடும் என் வாழ்வு....
விடிவினை தேடி
பொழுதினை மறந்து
உறங்கிடும் போதும்
உலர்ந்திடும் உன் நினைவு
உதிர்ந்திடா என் மனதில்...
கனவுகள் கோடி
கசிந்திட்ட போதும்
கனிந்திட்ட உன் நினைவு
கரைந்திடா என் நெஞ்சில்
காலங்கள் போகும்
கவிகள் பாடும்
மேகங்கள் கலையும்
யாகங்கள் செய்வேன்
யாவும் நிலைத்து
எம் வாழ்வில் வசந்தம் ஒன்று கூட.....


























Bons Plans
Annuaire
Scan