பாரிஸ் நகரம்..
21 வைகாசி 2013 செவ்வாய் 12:41 | பார்வைகள் : 15576
பாரிஸ் நகரம் உன் வாசம் தொட்டு வீசுதே
ஈபிள் நிழலில் உந்தன் விம்பம் தானாய் பூர்க்கிறதே
என் நினைவில் நினைவில் நீயடி
என் உயிரில் உயிரில் நீயடி
உனை நித்தம் கண்டு பேசவே
விண்வெளிப்பூக்களும் தரை வருகிறதே
உனைக்கண்டு பாடவே
மொழிகளும் தவம் செய்யுதே
உன் அழகை பேசவே பூக்களும் உயிர்பெறுதே
(பாரிஸ் நகரம் ....)
டாவின்சி ஓவியம் உன்னழகில் உடைகிறதே
லூவரில் கலவரம் உன்னாலே தொடர்கிறதே
விழிமுகத்தில் விழுந்த என்னை
இதழசைவின் விரல்கொடுத்தாய்
இடைவெளிகள் நீண்டு விழ
இரவுவலி தேக்க வைத்தாய்
கனவலைகள் உயிர் கரைக்க
கடைவிழிகள் உனைப்படிக்குதே
உயிர்வழியில் உன்விம்பம்
எனக்கெனவே நடைபழகுதே
(பாரிஸ் நகரம் ....)
தெருவிலே ஆடைகள் விஞ்ஞானம் நெய்கிறதே
இரவிலே வானவில் மின்சாரம் செய்கிறதே
எட்டுச்சந்தியில் விக்கி நிற்க
உச்சி தட்ட நீயும் இல்லையே
எட்டிப்பார்த்தேன் அசைவுநெளிய
கண்ட பெண்மை நீயும் இல்லையே
பிரிவேட்டின் அலைவரிசை
செவியோரம் உரசுறதே
நடை பேசும் நகர்வுகள்
உனக்கெனவே முளைக்கிறதே
(பாரிஸ் நகரம் ....)
- த.தர்ஷன்


























Bons Plans
Annuaire
Scan