Paristamil Navigation Paristamil advert login

ஏனடி பெண்ணே...!

ஏனடி பெண்ணே...!

19 சித்திரை 2013 வெள்ளி 06:39 | பார்வைகள் : 14533


 

ஏனடி பெண்ணே
உன் கால்கள் தடம் மாறுது
உன் ஜீவன் எப்போதுமே
என்னோடு உறவாடுது
                         (ஏனடி பெண்ணே ....)


முதல் பார்வை நீயும் தந்து
என் மனசில் வந்தாயே
முதல் பாவை நானும் கண்டு
உன் உயிரில் நனைந்தேனே
முதல் முத்தம் நீயும் தந்து
என் தேகம் படித்தாயே
முழு நிலவை நானும் கண்டு
பகல் பொழுதை மறந்தேனே
நிழலும் என் சொந்தம் என்றாய் அன்பே
நீயும் என் தெய்வம் என்றாய் நெஞ்சே
நீங்காத எண்ணங்கள் நீ ....
மாறாத காயங்கள் ஏனோ இன்று
                  (ஏனடி பெண்ணே ....)


என்  இதயம் உனக்குள் என்று
நீ தானே சொன்னாயே
கண்ணாடி நெஞ்சம் என்று
கல் வீசி போகாதே
என் விழியின் உறக்கம் நீயே
இமையாலே சொன்னாயே
கடதாசி கப்பல் என்று
படியேற மறுக்காதே
நீயே என் தேசம் அன்பே அன்பே
நீயே என் சுவாசம் நெஞ்சே நெஞ்சே
விழி தேடும் என் காதல் நீ ....
விரல் சேர எனைக்காண வா அன்பே
                         ( ஏனடி பெண்ணே )

கவிஞர்:த.தர்ஷன்

வர்த்தக‌ விளம்பரங்கள்