ஈழத்தின் ஒரு மாணவன் குரல் ..
18 பங்குனி 2013 திங்கள் 11:41 | பார்வைகள் : 9821
எந்த அரசியல் வாதியையும்
நாம் முழுமையாய் நம்பவில்லை
அவர்கள் பேச்சிலும் அதிகம் அக்கறை இல்லை ..
பத்திரிக்கை பார்த்த போது
மெய்சிலிர்த்தது ..
முக நூல் பார்த்த போது
அகம் மலர்ந்தது..
எம் இனம் காக்க
எங்களுக்கு குரல் கொடுக்க
எம் தோழர்கள் பள்ளி படிக்கட்டு விட்டு இறங்கி வந்தமை ..
பற்றி எரிகிற
உங்கள் தமிழ் உணர்வு கண்டு
எந்த இனமும் கலங்க வேண்டும் நம்
மீது கருணை கொள்ள வேண்டும் ..
அமெரிக்கா தீர்மானமும் தெரியாது
எந்த நாடு எதனுடன் இராஜ தந்திர உறவு கொண்டமையும் புரியாது எங்களுக்கு ..
எங்களுக்கும்
உங்களை போல் போராட வேண்டும் ..
ஆனால் எங்கள் அப்பன் அம்மாக்கு கொள்ளி இட
நாங்கள் இருக்கவும் மாட்டோம் .. எங்கள் அஸ்தி கூட
எங்கள் வீடு செல்லாது என்பது நீங்கள் அறிவீர் ....
மாணவர் மாணவராய் இயங்குங்கள் ..
எங்கள் மண்ணில் மாற்றம் வார விடினும்
உங்கள் எழுச்சியில் எந்த இழுக்கும் இடம் வர கூடாது ..
நாங்கள் இங்கு வாழ்கிறோம்
எங்களை சுத்தி காவலுக்காய்
எத்தனை துப்பாக்கிகள் அரசாங்க பணத்தில்
அர்பணிப்பான செயலுடன் ..
தமிழன் வீரம்
தொலைந்தது தமிழின துரோகிகள் காரணம் ..
இப்போ !
உலக தமிழினமே
கண்கள் கொண்டது உங்கள் தமிழகம் மீது
உங்கள் போராட்டம் மீது ..
ஏளனம் செய்வோரை ஏங்க வையுங்கள் உங்கள்
சக்தி என்னவென்று ..
இது எங்கள் சுய நலத்துக்காய் உங்களை
நுனி கிளையில் ஏற்றவில்லை ..
முறிந்து வீழ்ந்தாலும் எம் மூச்சு நின்றாலும்
எம் இனத்தின் சுய மரியாதைக்காய் என்று போராடுங்கள் ..
உங்கள் போராட்டதுக்காய் எங்கள் ஆதரவு
இதயத்தில் மட்டும் அல்ல
ஒவ்வரு குருதி துளியிலும் உணர்வாக உண்மையாக
கலந்து உள்ளது .
அதை நாம் மௌனமாகவே தைத்து பூட்டி உள்ளோம் ..
எம் இனத்தின் பரம்பரை வளர்சிக்காக ..
உங்களை உன்னிப்பாக பாக்கிறோம் உங்கள் ஆதரவை அன்பாக ஏற்கிறோம் ..
எப்போதும் எங்கள் அண்ணன் அக்காவாக ஏற்கிறோம் ..
எங்களுக்காய் குரல் கொடுங்கள் உங்களுக்காய் எதையும் கொடுப்போம் ..
இது வெறும் பேச்சு அல்ல நாங்கள் எழுதி வைக்கும் வேதம்..
வாழ்க தமிழ் வாழ்க நம் இனம் வாழ்க நம் மொழி வாழ்க நம் தேசம்