இங்கிலாந்தில் திடீரென வெடித்த 2 ஆம் உலகப்போர் குண்டு

12 மாசி 2023 ஞாயிறு 15:54 | பார்வைகள் : 10393
இங்கிலாந்து நகரமொன்றில் வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும்போது குண்டு திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இது தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து Yare நதியின் அருகில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட250 கிலோ எடையுள்ள வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 2 ஆம் உலகப்போர் குண்டை செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்து சிதறியுள்ளது.
வெடிகுண்டு வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வை 15 மைல் தொலைவுக்கு உணரமுடிந்ததாகவும், கட்டடங்கள் குலுங்கியதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிர்ஷ்டவசமாக, இந்த பயங்கர சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.