எகிப்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழைமையான மம்மி

27 தை 2023 வெள்ளி 06:31 | பார்வைகள் : 12296
எகிப்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆகப் பழைமையானதாக நம்பப்படும் mummy எனும் பதப்படுத்தப்பட்ட உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தலைநகர் கைரோவுக்கு அருகிலுள்ள சக்காரா (Saqqara) வட்டாரத்தில் 4,300 ஆண்டுகள் பழைமையான பதப்படுத்தப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
15 மீட்டர் ஆழத்தில் உள்ள குழியில் இருந்த பதப்படுத்தப்பட்ட உடல் மீது தங்கம் பூசப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உடல்களில் முழுமையான உருவத் தோற்றத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட 'mummy'களில் இதுவும் ஒன்று என்று நம்பப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட உடல், அரச குடும்ப உறுப்பினர் இல்லாத Hekashepes என்ற ஆடவருக்குச் சொந்தமானது.
எகிப்தில் மேலும் 4 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கல்லறைகளில் இரண்டு பூசாரிகள், ஓர் எழுத்தாளர், அரண்மனையில் சமயம் சார்ந்த சடங்குகளைப் புரிந்த அதிகாரி ஒருவர் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1