தேவையற்ற சண்டைகளில் அதிகம் ஈடுபடும் மீன்கள் - வெளியான விசித்திர காரணம்

5 தை 2023 வியாழன் 13:20 | பார்வைகள் : 11928
பவளப்பாறை வெளுப்படைவதால் மீன்களுக்கான உணவு குறைந்துவிட்டது என்றும் அதனால் அவை தேவையற்ற சண்டைகளில் அதிகம் ஈடுபடுவதாகவும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Butterflyfish மீன்களில் 38 வகைகள் பவளப்பாறை வெளுப்படைவதால் எப்படிப் பாதிக்கப்படுகின்றன என்பது ஆராயப்பட்டது.
அவை பவளப்பாறையை உட்கொள்பவை. 2016ஆம் ஆண்டு பவளப்பாறை வெளுப்படைவது மோசமடைந்தது.
அதில் Acropora என்ற பவளப்பாறை தான் அதிகம் பாதிக்கப்பட்டது. அதுவே butterflyfish மீன்களுக்கான முக்கிய உணவு.
அதனால் அந்த மீன்களுக்கிடையே உணவுக்கான போட்டி அதிகரித்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.
ஒரு மீன் உணவை விட்டுக்கொடுக்கும் வரை அதை இன்னொரு மீன் துரத்தும். அவ்வாறு 3,700 சம்பவங்களை ஆய்வாளர்கள் கண்டனர்.
பவளப்பாறை வெளுப்படைவதற்கு முன்பு அறிகுறிகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போக்கு 28 விழுக்காடாக இருந்தது.
பவளப்பாறை வெளுப்படைந்ததற்குப் பிறகு அது 10 விழுக்காடாகச் சரிந்தது.
இந்தப் போக்கு மீன்களைப் பட்டினிக்கு இட்டுச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.