ஆஸ்திஸ்ரேலியாவில் முதல் முறையாக அரிய கண்டுபிடிப்பு!
14 மார்கழி 2022 புதன் 13:47 | பார்வைகள் : 8876
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் Elasmo-saurus எனும் நீளமான கழுத்துகொண்ட கடல்வாழ் ஊர்வன இனத்தின் முழு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக உயிரினங்களின் இறப்புக்குப் பிறகு அதன் எலும்புகள் பல பாகங்களாகப் பிரிக்கப்படும்.
அந்நிலையில் Elasmo-saurusஇன் முழு எலும்புக்கூடு கிடைத்தது அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இதுவரை ஆய்வாளர்களுக்கு மர்மமாக இருந்த பலவற்றை இந்தக் கண்டுபிடிப்பு தெளிவாக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
Elasmo-saurus சுமார் 66 மில்லியனுக்கும் 145 மில்லியனுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனசோர்களுடன் உயிர்வாழ்ந்த ஊர்வன குடும்பத்தைச் சேர்ந்தது.
அவை எவ்வாறு சூழலுக்கேற்ப மாறின, அச்சமயத்தில் ஊர்வன குடும்பத்தில் எத்தனை விதமான பிராணிகள் இருந்தன என்ற கேள்விகளுக்கு இந்தக் கண்டுபிடிப்பு விடைகாண உதவும் என்று குவீன்ஸ்லந்து அருங்காட்சியகக் காப்பாளர் கூறுகிறார்.