Paristamil Navigation Paristamil advert login

இத்தாலியின் 150 ஆண்டுகள் பழமையான டோமினா சிலை சேதம்

இத்தாலியின் 150 ஆண்டுகள் பழமையான டோமினா சிலை சேதம்

5 ஆவணி 2023 சனி 12:29 | பார்வைகள் : 5634


இத்தாலியின் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலையை ஜேர்மன் சுற்றுலா பயணிகள் சிதைத்ததாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
19ம் நூற்றாண்டை சேர்ந்த நீரூற்று சிலையை ஜேர்மனியை சேர்ந்த  இளம் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஒன்று சேதப்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
 
என்ரிகோ புட்டி என்ற கலைஞரால் உருவாக்கப்பட்ட டோமினா சிலை சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், இதன் மதிப்பு சுமார் € 200,000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
 
ஐரோப்பில் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதாக தகவல் வெளிவரும் நிலையில், ரோமன் கொலோசியம் சேதப்படுத்தியதில் 3 சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 
 
இத்தாலி செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டோமினா சிலை அமைந்து இருந்த அலெகோ (Aleco) வில்லா-வை ஜேர்மன் சுற்றுலா பயணிகள் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
 
இதில் ஜானிஸ் டேனர் என்ற நன்கு அறியப்பட்ட இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு செலுத்தபவரும் உள்ளடக்கம் என தெரியவந்துள்ளது.
 
ஜேர்மன் சுற்றுலா பயணிகள் வெளியேறிய பிறகு வில்லா காப்பாளர் சேதமடைந்த சிலையை கண்டு அதிர்ச்சி அடைந்து சிசிடிவி-வை பார்த்துள்ளார்.
 
அதில் ஜேர்மன் சுற்றுலா பயணி ஒருவர் சிலையை சேதப்படுத்துவதையும், சிலர் அதனை கமெராவில் படம் பிடிப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.
 
பின் உடனடியாக இத்தாலியை விட்டு வெளியேறிய ஜேர்மன் சுற்றுலா பயணிகள் 17 பேர் மீதும் வில்லா காப்பாளர் புகார் அளித்துள்ளார்.
 
அதனடிப்படையில் பொலிஸார் அந்த வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் லோம்பாடி பிராந்திய கவுன்சிலர் கருசோ, சிலையை சேதப்படுத்தியவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்