Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் மீட்கப்பட்ட உலகப் போர் குண்டுகள்

கனடாவில் மீட்கப்பட்ட உலகப் போர் குண்டுகள்

24 ஆடி 2023 திங்கள் 10:50 | பார்வைகள் : 11174


 கனடாவில் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு தொகுதி பாரிய குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
 
கனடாவின் நியூபவுன்ட்லாண்ட் பகுதியில் இந்த குண்டுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
 
போர் காலத்தில் மூழ்கிய இரண்டு அமெரிக்க கப்பல் இடிபாடுகள் அமைந்துள்ள பகுதிகளில் இவ்வாறு சுமார் 12 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
 
கண்டு பிடிக்கப்பட்ட ஒரு குண்டு 227 கிலோ கிராம் எடையுடையது என தெரிவிக்கப்படுகின்றது.
 
கனடிய கடற்படையினர் இந்த குண்டுகளை கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ரக்ஸ்ரன் மற்றும் யு.எஸ்.எஸ். பொலுக்ஸ் ஆகிய கப்பல்களின் இடிபாடுகள் அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
 
இந்த இரண்டு கப்பல்களும் 1942ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி நீரில் மூழ்கியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இரண்டாம் உலகப் போரின் போது நியூபவுன்ட்லாண்டில் அமெரிக்க கடற்படை முகாமொன்று காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்