Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பா பற்றி துல்லியமாக அன்றே கணித்த நாஸ்ட்ராடாமஸ்

ஐரோப்பா பற்றி துல்லியமாக அன்றே கணித்த நாஸ்ட்ராடாமஸ்

20 ஆடி 2023 வியாழன் 10:31 | பார்வைகள் : 6616


ஐரோப்பாவின் பெரும்பகுதியை தற்போது வாட்டி வதைக்கும் வெப்ப அலை குறித்து பிரான்ஸ் நாட்டவரான நாஸ்ட்ராடாமஸ் அன்றே துல்லியமாக கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது நாஸ்ட்ராடாமஸ் பதிவு செய்துள்ள கணிப்புகள். பிரஞ்சு புரட்சி உட்பட, ஹிட்லரின் வருகை, ஜப்பானில் அணு குண்டு வீச்சு என அவர் கணிப்புகள் பல துல்லியமாக நிறைவேறியுள்ளது.
 
மட்டுமின்றி, பிரித்தானிய ராணியாரின் மறைவு தொடர்பிலும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 2023 தொடர்பில் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ள முக்கிய சம்பவம் ஒன்று தற்போது நிறைவேறியுள்ளதாக கூறுகின்றனர்.
 
மட்டுமின்றி, துல்லியமாக அது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் ஆய்வு மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது ஐரோப்பாவில் தற்போது வெப்ப அலை வாட்டி வதைப்பதை நாஸ்ட்ராடாமஸ் துல்லியமாக கணித்துள்ளார் என்றே கூறுகின்றனர்.
 
கிரேக்க தீவான ரோட்ஸ் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்படும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ளார். சமீப நாட்களாக ரோட்ஸ் தீவில் தொடர்ந்து 40C வெப்பம் நீடித்து வருகிறது.
 
அத்துடன் காட்டுத்தீயும் வெடித்து கிளம்ப, சுற்றுலாவுக்கு சென்ற பிரித்தானிய மக்கள் உட்பட பலர் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர். நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டுள்ள இன்னொரு நகரம், இத்தாலியின் Genoa.
 
இங்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தாலியில் வெப்ப அலை காரணமாக மரண எண்ணிக்கை அதிகரித்துள்லதாகவும், மருத்துவமனைகளை மக்கள் அதிகமாக நாடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தற்போது ஐரோப்பாவில் சராசரியாக வெப்பநிலை 48.8C என பதிவாகியுள்ளது. ஆனால் எதிர்வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்