ஜப்பானில் 1200 ஆண்டுகள் பழமையான கோவில் சேதம்
.webp)
12 ஆடி 2023 புதன் 08:19 | பார்வைகள் : 9303
ஜப்பானில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை கனேடிய சுற்றுலா பயணியான 17 வயது சிறுவன் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் நாராவில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தோஷோடைஜி கோண்டோ கோவில் வளாகத்தில் உள்ள மரத்தூண்னை கனேடிய சுற்றுலா பயணியான 17 வயது சிறுவன் ஒருவன் ஜூலை 7ம் திகதி சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாகவும், பண்டைய நாராவின் வரலாற்று சின்னங்களை உருவாக்கும் 8 தளங்களில் ஒன்றாகவும் விளங்கும் இந்த கோவிலில் சிறுவன் சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் உள்ள 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தூணில் கனேடிய சுற்றுலா பயணியான 17 வயது சிறுவன் தன்னுடைய கை நகங்களால் “ஜூலியன்” என பெயரை எழுதி சேதப்படுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரத்தூணில் தரையில் இருந்து 170 செ.மீ உயரத்தில் சிறுவன் “ஜூலியன்” என கை நகங்களால் கிறுக்குவதை பார்த்த அங்கிருந்த ஜப்பான் நாட்டவர் ஒருவர் சிறுவனை தடுத்துள்ளார்.
பின்னர் கோவில் நிர்வாக அதிகாரிகளிடமும் தெரியப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து சிறுவனிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது, ஜப்பான் கலாச்சாரத்தை சேதப்படும் எந்தவொரு உள்நோக்கத்திலும் இந்த தவறை செய்யவில்லை என்று சிறுவன் தெரிவித்துள்ளான்.
இதற்கிடையில், சிறுவன் கலாச்சார சொத்துக்களை சேதப்படுத்தி இருந்தால் அவர் வழக்கறிஞரிடம் அனுப்பி வைக்கப்படுவார்.
ஆனால் எப்படி இருப்பினும் அவர் தற்போது கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக கலாச்சார சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் ஜப்பானிய விதிப்படி, 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லது 300,000 யென் அபராதமாக செலுத்த வேண்டும்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1