Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் 3,000 ஆண்டுகள் பழமையான போர் வாள்...

ஜேர்மனியில் 3,000 ஆண்டுகள் பழமையான போர் வாள்...

17 ஆனி 2023 சனி 10:07 | பார்வைகள் : 10330


தெற்கு ஜேர்மனியில் இருந்து சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான வெண்கல வாள் ஒன்று சேதமடையாமல் மீட்கப்பட்டுள்ளது.
 
குறித்த வாள் தொடர்பில் தெரிவித்த பவேரிய மாகாணத்தின் BLfD நிர்வாகம், 14ம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தயாரிக்கப்பட்ட வாளாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
 
கடந்த வாரம் Nördlingen பகுதியில், Nuremberg மற்றும் Stuttgart இடையே அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
 
இந்த வாள் ஒரு எண்கோண பிடியைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூன்று பேர் கொண்ட கல்லறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
 
மேலும், அந்த வாள் மற்றும் மூவரின் அடக்கம் தொடர்பில் இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
 
இதனால் நமது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை இன்னும் துல்லியமாக வகைப்படுத்த முடியும் என மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 
 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்