உலகின் பணக்கார நகரங்கள் அறிக்கை 2023
19 சித்திரை 2023 புதன் 11:11 | பார்வைகள் : 8832
உலகின் பணக்கார நகரங்கள் அறிக்கை 2023' வெளியாகியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட உலகின் பணக்கார நகரமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மகுடம் பிடித்துள்ளது.
இந்த நகரத்தில் 3,40,000 மில்லியனர்கள் உள்ளனர் என்று உலகளாவிய செல்வத்தை கண்காணிக்கும் ஹென்லி & பார்ட்னர்ஸ் (Henley & Partners) அறிக்கை கூறுகிறது.
பிக் ஆப்பிள் என புனைப்பெயர் கொண்ட நியூயார்க் நகரத்தில், 3,40,000 மில்லியனர்கள், 724 சென்டி மில்லியனர்கள் மற்றும் 58 பில்லியனர்கள் உள்ளனர்.
நியூயார்க் நகரத்தைத் தொடர்ந்து 290,300 கோடீஸ்வரர்களுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து 285,000 கோடீஷ்வரர்களுடன் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிகள் (San Francisco Bay Area) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட இந்த 'உலகின் பணக்கார நகரங்கள் அறிக்கை 2023' உலகளவில் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, சிஐஎஸ், கிழக்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய ஒன்பது பிராந்தியங்களில் உள்ள 97 நகரங்களை உள்ளடக்கியது, இதில் உலகின் முதன்மையான செல்வ மையங்கள் அடங்கும்.நியூயார்க், தி பே ஏரியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ ஆகிய நான்கு நகரங்களுடன் இந்தப் பட்டியலில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. சீனாவின் இரண்டு நகரங்கள் (பெய்ஜிங் மற்றும் ஷாங்காய்) பட்டியலில் உள்ளன.
258,000 குடியுரிமை பெற்ற உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களுடன் (HNWIs) லண்டன் இந்த ஆண்டு பட்டியலில் நான்காவது இடத்திற்குக் குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 5-வது இடத்தில் 240,100 கோடீஸ்வரர்களுடன் சிங்கப்பூர் உள்ளது.
2000-ஆம் ஆண்டில், லண்டன் கோடீஸ்வரர்களில் உலகின் முதன்மை நகரமாக இருந்தது, ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அது பட்டியலில் பின்தங்கியுள்ளது.