கின்னஸ் உலக சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்

16 சித்திரை 2023 ஞாயிறு 08:14 | பார்வைகள் : 11544
அவுஸ்திரேலியர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் அதிக தண்டால் (Push-Ups) செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த 33 வயதான லூகாஸ் ஹெல்ம்கே (Lucas Helmke), ஒரு மணி நேரத்தில் 3,206 புஷ்-அப்களை செய்து கின்னஸ் உலக சாதனை பட்டத்தை வென்றார்.
கின்னஸ் உலக சாதனை அறிக்கையின்படி, லூகாஸ் ஹெல்ம்கே ஒரு நிமிடத்திற்கு குறைந்தது 53 முறை தண்டால் அடித்துள்ளார்.
முன்னதாக, ஒரு மணி நேரத்திற்கு 3,182 தண்டாள்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இதனையும் Daniel Scali என்கிற அவுஸ்திரேலியர் தான் செய்துள்ளார்.
தனது ஒரு வயது மகனை உற்சாகப்படுத்தவும், இந்த உலகில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதைக் காட்டவே, அவர் இந்த அற்புதமான சாதனையை முயற்சித்ததாக லூகாஸ் ஹெல்ம்கே கூறினார்.
லூகாஸ் கின்னஸ் உலக சாதனை முயற்சிக்காக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.
அவரது இந்த சாதனை முயற்சியானது, பிரிஸ்பேனில் உள்ள அவரது பழைய பவர் லிஃப்டிங் ஜிம்மான அயர்ன் அண்டர்கிரவுண்டில் நடந்தது. ஒவ்வொரு புஷ்-அப்பிற்கும் அவர் சரியான வடிவத்தை வைத்திருக்கும்படி கின்னஸ் அமைப்பு அவரிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.
நம்பமுடியாத வகையில், அவர் தனது உடலை 99 சதவிகிதம் திரும்பத் திரும்ப நேராக வைத்திருந்தார், மேலும் மொத்தத்தில் வெறும் 34 தண்டாள்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
அடுத்தடுத்து பல புஷ்-அப் சாதனைகளை படைக்க விரும்புவதாகவும், அதில் இந்த சாதனை முதல் படி தான், என்று லூகாஸ் கின்னஸிடம் கூறினார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1