Paristamil Navigation Paristamil advert login

சுருட்டுப் பெட்டியில் மறைந்திருந்த எகிப்தின் பண்டைக்கால அரும்பொருள்

சுருட்டுப் பெட்டியில் மறைந்திருந்த எகிப்தின் பண்டைக்கால அரும்பொருள்

16 மார்கழி 2020 புதன் 16:53 | பார்வைகள் : 9646


எகிப்தின் பண்டைக்கால அரும்பொருள் ஒன்று நீண்ட காலாமாகக் காணாமற்போன பின், மீண்டும் சுருட்டுப் பெட்டி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 
அதன் மூலம் எகிப்தின் மாபெரும் கூஃபு பிரமிடைப் (Great Pyramid) பற்றிய புதிய தகவல்களைக் கண்டறியலாம் என எதிர்பார்க்கப்படுகிற்து.
 
ஸ்காட்லந்தைச் சேர்ந்த எபர்டீன் (Aberdeen) பல்கலைக்கழக ஊழியர் ஒருவர், அந்த அரும்பொருளை எதிர்பாராதவண்ணம் கண்டுபிடித்தார்.
 
பண்டைக்கால மரத் துண்டுகள் அவை. அந்த மரத் துண்டுகளுக்குச் சுமார் 5000 வயது இருக்கலாம் எனக் கரிமச் சோதனையில் உறுதியாகி இருக்கிறது.
 
முதன் முதலில் அந்த மரத் துண்டுகள், 1872 ஆம் ஆண்டு Waynman Dixon என்ற பொறியாளரால், பெரிய பிரமிடின் ராணி அறையில் கண்டுபிடிக்கப்பட்டன.
 
Cedar எனப்படும் தேவதாரு மரத்தால் ஆனவை, அந்த மரத் துண்டுகள் என நம்பப்படுகிறது.
 
பிரமிடின் கட்டுமானத்தில் அந்த மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். 1946ஆம் ஆண்டில் அந்தப் பல்கலைக் கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மரத் துண்டு, அதன்பின் காணாமற்போனது.
 
கூஃபு பிரமிடின் உள்புறத்திலிருந்து இதுவரை மூன்றே மூன்று பொருள்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று இந்த மரத் துண்டு.
 
ஆகவே, இந்த மரத் துண்டுகள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. மாபெரும் பிரமிடுக்குள் கண்டெடுக்கப்பட்ட மற்ற இரண்டு பொருள்கள் ஒரு கருங்கல் பந்தும் சிறிய வெண்கலக் கொக்கியும்...
 
அவை இரண்டும் பிரிட்டிஷ் அரும்பொருளகத்தில் உள்ளன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்