25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டிகள் கண்டெடுப்பு
15 கார்த்திகை 2020 ஞாயிறு 04:28 | பார்வைகள் : 9895
எகிப்து நாட்டில் 25ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 100க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Saqqara Necropolis பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவை, வர்ணம் பூசப்பட்டு, நன்கு பாதுகாக்கப்பட்ட வகையிலும் அமைந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கு 59 சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சவப்பெட்டிகளும், அதனுடன் தொடர்புடைய மம்மிகள் மற்றும் கலைப்பொருட்களும் எகிப்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. இது அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.