6.5 கோடி ஆண்டுகள் பழமையான மீன் இனம் கண்டுபிடிப்பு..!
10 கார்த்திகை 2020 செவ்வாய் 11:20 | பார்வைகள் : 9438
ஐரோப்பாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஆறரை கோடி ஆண்டுகள் பழமையான Asprete மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
31 வயதான மீன் உயிரியலாளரான டோகோ என்பவர் இந்த மீனின் 12 மாதிரிகளை அக்டோபர் பிற்பகுதியில் ரோமானியாவில் ஓடும் வால்சன் ஆற்றில் கண்டுபிடித்து உள்ளார்.
ஆஸ்பிரீட் மீன் முதன்முதலில் ஒரு உயிரியல் மாணவரால் 1956 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் விஞ்ஞானிகள், உயிரியியல் பாதுகாப்பு வல்லுநர்கள் ஒன்று கூடி ஆறரை கோடி ஆண்டுகள் பழமையான இந்த மீன்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.