Paristamil Navigation Paristamil advert login

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி! எந்த நாட்டில் தெரியுமா?

பச்சை நிறத்தில் பிறந்த நாய்க்குட்டி! எந்த நாட்டில் தெரியுமா?

28 ஐப்பசி 2020 புதன் 14:06 | பார்வைகள் : 9421


 
இத்தாலியிலுள்ள சார்டினியா தீவில் சார்டியன் வகை நாய் ஒன்று பச்சை நிறக் குட்டியை ஈன்று அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
குறித்த தீவில் வசிக்கும்  க்ரிஸ்டியன் மல்லோச்சி என்பவருக்கு செந்தமான ஸ்பெல்லாச்சியா என்ற  நாயே கடந்த 9 ஆம்  திகதி நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.
 
அந்தக் குட்டிகளில் ஒன்றுதான் பச்சை நிறத்துடன் பிறந்துள்ளது. பச்சை நிறத்தில் காணப்படுவதால் பிஸ்தாவின் நிறத்தைக் குறிக்கும் வகையில் அந் நாய்க்குட்டிக்கு ‘பிஸ்டாசியோ( Pistachio ) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
பச்சை நிற முடியுடன் நாய்க்குட்டி பிறப்பது அரிதிலும் அரிதான நிகழ்வாகும். வெளிர் நிற நாய்க் குட்டிகள் கருப்பையில் உள்ளபோது, பிலிவர்டின் எனப்படும் பச்சை நிறமியுடன் தொடர்பு ஏற்படும்போது, குட்டிகள் பச்சை நிறத்தைப் பெறுகின்றன.  உடலில் சிராய்ப்புகள் ஏற்படும்போது தோல் பச்சை நிறத்துக்கு மாறக் காரணமாக இருப்பதும் இதே பில்வெர்டின் நிறமிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்ந்லையில் இது குறித்து அதன் உரிமையாளர் க்ரிஸ்டியன் மல்லோச்சி கருத்துத் தெரிவிக்கையில்  “பிஸ்டாசியோ நாய்க்குட்டி பச்சை நிறத்துடன் பிறந்ததைப் பார்த்தபோது என் கண்ணாலேயே நம்ப முடியவில்லை. ஆனால், வளர வளர அதன் பச்சை நிறம் மங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவிவரும் காலகட்டத்தில் பச்சை நிறத்தில் நாய்க்குட்டி பிறந்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இது அதிஷ்டத்தின் வெளிப்பாடாகும். விரைவில் மக்களின் துயரம் நீங்கப் போகிறது. பிஸ்டாசியோ  நாய்க்குட்டி அனைவரின் முகத்திலும் புன்னகையைக் கொண்டுவரும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்