140 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மாற்றம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
16 ஐப்பசி 2020 வெள்ளி 15:13 | பார்வைகள் : 9579
கடந்த 140 ஆண்டுகளில் அதிக வெப்பநிலை பதிவான செப்டம்பர் மாதமாக கடந்த மாதம் உருவாகியுள்ளது.
20ஆம் நூற்றாண்டில் பதிவான சராசரி வெப்பநிலையை விட கடந்த செப்டம்பர் மாதத்தில் 1 புள்ளி 7 டிகிரி பாரன்ஹீட் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சைபீரியா, மத்திய கிழக்காசியா மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவியதாக தெரிவித்த அவர்கள், பல இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களும் இதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இந்த ஆண்டு உருவாகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக கூறியுள்ளனர்.