6000 பேரின் உடல் எச்சங்களுடன் வியப்பூட்டும் கல்லறை கண்டுபிடிப்பு!
16 மாசி 2020 ஞாயிறு 10:06 | பார்வைகள் : 9584
புருண்டி நாட்டை சேர்ந்த மக்கள் தொகையானது துட்ஸி மற்றும் ஹுட்டு என இரு சமூகத்தினரை அடிப்படையாக கொண்டு பிரிக்கப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், 6 ராட்சத கல்லறைகளில் இருந்து படுகொலை செய்யப்பட்ட 6000 பேரின் உடல் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரு சமூக பழங்குடியினர்களுக்கிடையே நடந்த உள்நாட்டு யுத்தமானது 2005 இல் முடிவுக்கு வந்தது.
ஆனால் அதற்கு முன்னர் முழு குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 300,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து ஆகியவை நாடு முழுவதும் கசப்பான பினாமி போர்களை நடத்தியது.
உள்கட்டமைப்பு மற்றும் முழு கிராமங்களையும் அழித்தது.
இவ்வாறு 1885 முதல் நடந்த அட்டூழியங்களை விசாரிக்க 2014 இல், அரசு சார்பில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவானது அப்பொழுதில் இருந்து மத்திய ஆப்பிரிக்க நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ராட்சத கல்லறைகளை கண்டுபிடித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் 6 ராட்சத கல்லறைகளில் இருந்து 6,000 க்கும் மேற்பட்ட சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இக்குழுவின் தலைவரான பியர் கிளாவர் ந்திகாரியே சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
பல பாதிக்கப்பட்டவர்கள் உடைகள், கண்ணாடிகள் மற்றும் ஜெபமாலை உள்ளிட்ட மத நகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஹுட்டு இனத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்ததாக நம்பப்படுகின்றது.
ஒரு படுகொலையைக் குறிப்பிடுகையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் 48 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி மௌனம் கலைக்க முடியும் எனவும் பேசியுள்ளார்.
ஜனவரி மாதத்தில் நாடு முழுவதும் அகழ்வு ஆராய்ச்சிகளை அரசு நிறுவனம் தொடங்கியது.
கருசி மாகாணத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே மிகப்பெரியது எனவும் கூறியுள்ளார்.