Paristamil Navigation Paristamil advert login

எறும்புகளிடம் கூட கற்றுக்கொள்ள இவ்வளவு இருக்கிறதா?

எறும்புகளிடம் கூட கற்றுக்கொள்ள இவ்வளவு இருக்கிறதா?

11 மாசி 2020 செவ்வாய் 06:05 | பார்வைகள் : 16005


எதிரிகளிடம் சவால் விடும் பீரோக்கள் "நீ எல்லாம் எனக்கு எறும்பு மாதிரி, உன்னை நசுக்கி விடுவேன்" என சினிமாக்களின் வசனம் பேசுவார்கள். 
 
எறும்புகளை அளவு தான் அதற்குக் காரணம். ஆனால் ஒரு சிறிய எறும்புகளிடம் பல அற்புதமான குணங்கள் இருக்கின்றன. மனிதர்கள் அந்த எறும்புகளிடம் இருந்தும் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
 
அதற்கு உதாரணமாக தற்போது பிரவீஸ் கஸ்வான் என்ற ஐஎஃப் எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று உள்ளது. 
 
அந்த வீடியோவில் எறும்புகள் எல்லாம் வரிசையாக அணிவகுத்துச் செல்கிறது. இந்த எறும்புகளைத் தூரத்திலிருந்து மார்க்கும் போது ஏதோ ராணுவப்படை அணி வகுப்பை ஹெலிகாப்டரிலிருந்து வீடியோ எடுத்தது போல இருக்கிறது.
 
இந்த சிறிய எறும்புகளுக்குள் இவ்வளவு ஒற்றுமை மற்றும் ஒழுங்கு இருக்கிறதா என்ற விஷயம் பலரைக் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ மனிதர்களுக்கு, ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றைப் போதிக்கும் வண்ணம் இருக்கிறது. 
 
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
 
 
 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்