Paristamil Navigation Paristamil advert login

20 ஆண்டுகளாகியும் பார்க்க புதுசு போலவே இருக்கும் பர்கர்..!

20 ஆண்டுகளாகியும் பார்க்க புதுசு போலவே இருக்கும் பர்கர்..!

11 தை 2020 சனி 13:18 | பார்வைகள் : 9695


மாதக்கணக்கு ஆனாலும் ஊறுகாய் கெடாமல் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் மெக்டொனால்டு (McDonald's) கடையில் வாங்கப்பட்ட பர்கர் ஒன்று, 20 வருடங்கள் ஆகியும் இன்று வாங்கியது போல புதிதாக காட்சியளிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
டேவிட் விப்பிள் என்ற நபர் கடந்த 1999-ம் ஆண்டில் லோகன் நகர எல்லைக்கு உட்பட்ட Utah என்ற இடத்தில் இருந்த McDonald's கடையில் இருந்து பர்கர் ஒன்றை வாங்கியுள்ளார். நொதிகள் பற்றிய பரிசோதனைக்கு பயன்படுத்தவே அவர் அந்த பர்கரை வாங்கியுள்ளார். பின்னர் அவர் தனது கோட் ஒன்றில் அந்த பர்கரை மறந்து வைத்து விட்டதாக தெரிகிறது.
 
பின்னர் அந்த கோட் அவரது வேனின் பின்புறம் 2 வருடங்களுக்கு மேல் கிடந்துள்ளது.அதைத் தொடர்ந்து டேவிட் விப்பிள் குடும்பம் லோகனில் உட்டாவின் செயின்ட் ஜார்ஜ் நகருக்குச் சென்றது. அங்கு சென்ற பின்னர் டேவிட்டின் மனைவி அதைக் கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துள்ளார். இந்த பர்கர் ஒரு தகர டின்னில் வைக்கப்பட்து. 2013-ம் ஆண்டு முதல் இந்த பர்கர் பற்றி வெளியுலகிற்கு தெரிந்து வைரலானது
 
இந்நிலையில் தகர டின்னில் மூடி வைக்கப்பட்ட பர்கரை சமீபத்தில் திறந்து பார்த்தார் டேவிட். அப்போதும் புதிதாக வாங்கப்பட்ட பர்கரை போலவே காட்சி அளித்துள்ளது. ஆனால் பர்கரின் வாசனை மட்டும் மாறியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் வாங்கப்பட்ட பர்கரிலிருந்து தற்போது தான் ஒரு (cardboard) அட்டை வாசனை வருவதாக டேவிட் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்