பூமியில் புதைந்திருந்த ஆயிரம் ஆண்டுப் பழைமைவாய்ந்த அரண்மனை கண்டுபிடிப்பு!
28 மார்கழி 2019 சனி 10:48 | பார்வைகள் : 9672
மெக்ஸிக்கோவின் பிரபல சுற்றுலாத்தலமான கேன்கூனில் (Cancun) ஆயிரம் ஆண்டுப் பழைமைவாய்ந்த அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 மீட்டர் உயரத்தில் 825 சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது அரண்மனை.
கி.பி. 600ஆம் ஆண்டுக்கும் 1050ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தின்போது அரண்மனை இருப்பிடமாகப் பயன்பட்டு வந்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மாயன் (Mayan) ஆட்சிக்காலத்தின்போது அரண்மனை கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அரண்மனையைச் சுற்றியுள்ள இடத்தில் வேறு சில கட்டடங்களையும் சிதைவுகளையும் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
அவ்விடத்தின் சிதைவுகளை முழுமையாகக் கண்டெடுக்கும் பணிகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன என்றும், மேலும் பல சிதைவுகளைக் கண்டுபிடிக்கும் பணிகள் உள்ளன என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.