டைனோசர் கால இறக்கை கொண்ட ராட்சத பல்லியின் எச்சம் கண்டெடுப்பு!
12 புரட்டாசி 2021 ஞாயிறு 11:34 | பார்வைகள் : 10220
பூமியின் தென் பகுதியில் இருந்து முதன் முறையாக டைனோசர் காலத்தில் வாழ்ந்த இறக்கை கொண்ட ராட்சத பல்லியின் எச்சம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிலியை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Atacama பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள டெரோசர் (pterosaur) என்று அழைக்கப்படும் இந்த ராட்சத பல்லி சுமார் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
Pterosaur ராட்சத பல்லிகள் சுமார் 2 மீட்டர் நீள இறக்கைகள், நீளமான வால் மற்றும் கூரிய மூக்குடன் இருந்தவை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.