காற்று, சூரிய ஒளி கொண்டு தண்ணீரை உண்டாக்க முடியுமா?
4 ஆடி 2021 ஞாயிறு 07:36 | பார்வைகள் : 10121
வெறும் காற்று, சூரிய ஒளியைக் கொண்டு தண்ணீரை உருவாக்க முடியுமா?
ஆம், அதிக மக்கள் தொகை, பருவநிலை மாற்றம், அதிகரித்து வரும் நீர்ப் பற்றாக்குறை ஆகியவை காரணமாக, தண்ணீரைப் பெறுவதற்குப் புதிய தீர்வுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
நீர்ப் பற்றாக்குறை உள்ள சமூகங்களுக்கு உதவும் நம்பிக்கையில் உலகெங்கும் செயல்படும் பல நிறுவனங்களில் SOURCE Global எனும் நிறுவனமும் ஒன்றாகும்.
Hydropanels எனும் சூரியசக்தித் தகடுகள் பொருத்திய சாதனங்கள் மூலம் காற்றிலிருந்து தண்ணீரை உருவாக்குவது நிறுவனத்தின் நோக்கம்.
இதன்வழி மின்சாரம் தேவைப்படாமல் தண்ணீர் உருவாக்கலாம்.
துபாயில் நிறுவனத்தின் மிகப்பெரிய நீர்ப் பண்ணை அமைந்துள்ளது.
அதில் ஒவ்வோர் ஆண்டும் 1.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படுவதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
பிளாஸ்டிக் அல்லாத போத்தல் தண்ணீரை விற்க SOURCE திட்டமிட்டுள்ளது.